கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வருகிறது. உலகிலேயே தென் கொரியாவில் மட்டும்தான் கொரோனா காரணமாக அனுமதியாகும் நோயாளிகளை விட, கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகும் நபர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
அங்கு கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கொரோனாவால் 9,478 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4811 பேர் அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரைய மொத்தம் 144 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.
மூடவில்லை
அனைத்தையும் மூடவில்லை
மிக வேகமாக பரவிய கொரோனாவை அங்கு அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தி இருக்கிறது. அங்கு கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மட்டும்தான் மூடப்பட்டது. கடைகள், மால்கள், பொது இடங்கள் எதுவும் மூடப்படவில்லை. வெகு சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டது . அரசு நிறுவனங்கள் எதுவும் மூடப்படவில்லை.
பெரிய அளவில் லாக் டவுன் எதையும் அறிவிக்காமல், தென் கொரியா கொரோனாவை எதிர்கொண்டுள்ளது.
தேவையானவர்களை தனிமைப்படுத்தினார்கள்
தேவையான நபர்களை மட்டும் தனிமைப்படுத்தினார்கள்.
முழுவதுமாக லாக் டவுன் செய்யாமல், தேவையான நபர்களை மட்டும்தான் தென் கொரியா தனிமைப்படுத்தியது. அதாவது கொரோனா உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள். கொரோனா உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் முறையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.
வளரும் முன்பே
லேசான அறிகுறி இருந்தாலே சோதனை மிக முக்கியமாக தென் கொரியாவில் உடனுக்குடன் சோதனைகள் செய்யப்பட்டது.
கொரோனா சோதனைகள் அறிகுறி இருக்கும் எல்லோருக்கும் செய்யப்பட்டது. அதேபோல் கொரோனா உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்ட எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டது. இந்த கொரோனா அறிகுறி இல்லாமல் பரவ கூடியது. அதனால் அறிகுறி இல்லாத பல நபர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.
அங்கு மொத்தம் 5.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது .
வேகமாக பரவ காரணம்
அதையும் மீறி வேகமாக பரவ காரணம்
ஆனால் இதையும் மீறி ஒரு கட்டத்தில் அங்கு கொரோனா வேகமாக பரவியது.
இதற்கு காரணம் அங்கு நடந்த மத கூட்டம் ஒன்றுதான். தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும். இந்த ஷின்சேன்ஜி குழு என்பது லீ மேன் ஹீ என்று நபரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 9000 பேரில் 4500 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் கொரோனா பரவுவதற்கு மிக முக்கிய காரணமே இந்த அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று படிநிலை
மொத்தம் மூன்று படிநிலை
ஆனால் இதுவும் கூட அங்கு போக போக கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த தென் கொரியா பின் வரும் செயல்களை செய்தது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காணுதல்.
டெஸ்ட் செய்து உடனே முடிவுகளை வெளியிடுதல்.
மக்களை தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது.
காண்டாக்ட் டிரேஸ்
காண்டாக்ட் டிரேஸ் எப்படி செய்தனர்
அதை விட மிக முக்கியமாக காண்டாக்ட் டிரேஸ் முறையை தென் கொரியா மிக தீவிரமாக.மேற்கொண்டது. இந்த கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
அவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த சங்கிலியை தென் கொரியா மிக தீவிரமாக டிரெஸ் செய்தது.
செம டெக்னாலஜி
இதற்காக கூகுள் லொகேஷன் ஹிஸ்டரி மூலம் மக்கள் எங்கே எல்லாம் சென்றார்கள் என்று கண்டுபிடித்தனர். ஜிபிஎஸ் உதவி மூலம் மக்கள் சென்ற இடம் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் சிசிடிவி கேமரா மூலம், அவர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள். யாரை எல்லாம் தொட்டார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து பலருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.
மருத்துவமனை பாடம்
இதெல்லாம் போக சீனாவில் கொரோனா பரவிய போதே அதற்கு தென் கொரியா தயார் ஆகிவிட்டது. தங்கள் மருத்துவமனைகளை இதற்காக ஜனவரியிலேயே தென் கொரியா தயார் செய்துவிட்டது. கொரோனா சோதனைகளை செய்வதற்காக அப்போதே தங்கள் நாட்டு மருத்துவர்களை அந்நாட்டு அரசு தயார் செய்துவிட்டது. இதுதான் அந்நாடு கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம் அடைய காரணம் ஆகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...