Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தினம் ஒரு புத்தகம் -கதை கதையாம் காரணமாம்


நாமே இடந்தெரியாத ஓரிடத்தில் தொலைந்து போக விரும்பிக் கேட்கப்படுபவை கதைகள்தானே!!

கதைகளின் பலன்களை எல்லாம் அறிந்துகொண்டா சிறுவயதில் கதை சொல்லக்கேட்டோம்.

இப்போது கதைகள் கேட்பதின் நன்மைகளை பட்டியலிட்டுக் கூற வேண்டியிருக்கிறது.

காரணம் குழந்தைகள் அல்ல.

வளர்ந்துவிட்ட பெரியவர்கள் நாமே!!

தொலைக்காட்சியையும், செல்பேசியையும் நாமே கையில் திணித்துவிட்டு இப்போது அவர்களின் மனதில் கதை கேட்க ஆர்வப்படவில்லை என்கிறோம்.

ஆனால் உண்மையில் கதைகளை சொல்ல மறந்தது நாம்தானே?

கதை கதையாம் காரணமாம் புத்தகம் ஆசிரியர்க்கும், பெற்றோர்க்கும் கதை சொல்ல வேண்டியதன் அவசியத்தையும், ஏன் கதை சொல்ல வேண்டும் என்பதையும்,
எப்படி  கதை சொல்லலாம் என்று பயிற்சியையும், கதை கேட்டதின் விளைவால் தனக்குக் கிடைத்த படைப்பாற்றல்திறன் பற்றிய மாணவர் நிகின் அவர்களின் பதிவையும் இப்புத்தகத்தின் வழி கூறிச்செல்கிறார் விஷ்ணுபுரம் சரவணன்.

ஒரே புத்தகத்தை இரண்டு முறை உடனுக்குடன் நான் வாசித்தது இல்லை. இந்தப் புத்தகத்தை உடனே மறுமுறை படித்தேன்.காரணம்,

ஒரு ஆசிரியராக இந்தப் புத்தகத்தின் தகவல்களை நான் மூளையில் இருத்திக்கொள்ள வேண்டிய தேவையை உணர்ந்தேன்.

கதை சொல்ல சோம்பல் பட்டு, பிள்ளைகளுக்கு முன்னால் சிவநாட்களில் படுக்கை சென்ற பொழுதுகளை எண்ணிப்பார்க்கிறேன்.

அதுவே என் பிள்ளைகளுக்கு நான் செய்த மிகப்பெரிய கடமை மறந்த செயல் என உணர்கிறேன்.

என் பிள்ளை தினமும் மூன்று கதை சொல்ல வேண்டும் என்று அடம்பண்ணுவான்.

இன்று வீட்டுக்கு வந்ததும் மூன்று கதைகளை தேடி வாசித்தேன்.

இப்படி என் பொறுப்பை உணர வைத்த இந்தப் புத்தகத்திற்கு நன்றி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive