தேவையானவை
- இட்லி மாவு - 3 கப்
- காரட் - 2
- வெங்காயம் - ஒன்று
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- தக்காளி - 2
- உப்பு - கால் தேக்கரண்டி
- செய்முறை
முத்தாலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
காரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை பொடியாக நறுக்கி
வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை
போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்திருக்கும்
தக்காளியை போட்டு, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் கேரட் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும்.
பின் ஒரு பாஅத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொண்டு அதில் வதக்கிய கலவையை
சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் இட்லி பானையில்
தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும், இட்லி தடத்தில் எண்ணெய் தடவி அதில் ஒரு
கரண்டி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க
வேண்டும். இப்பொது சுவையான வெஜ் இட்லி தயார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...