எப்போது, எப்படி
வேண்டுமானாலும் தாக்கலாம் என்று அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ். தற்போது உலகமெங்கும் மக்கள் உச்சரிக்கும் ஒரே சொல் கொரோனா என்பது தான். கொரோனா தொற்றின் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றின் தாக்குதலிருந்து தப்பிக்கவே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், சினமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள் என்று மக்கள் கூடும் இடங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த கொரோனாவைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். எய்ட்ஸ், புற்றுநோயைக் கண்டு அஞ்சாத உலக சுகாதார நிறுவனம் ஏன் இதற்கு இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழக் கூடியது. காரணம் இது ஒரு தொற்று நோய் என்பதே. அதுவும் இது தொற்றக் கூடிய காலக் கட்டமும் சீக்கிரம் என்பதால் தான் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்.
வேண்டுமானாலும் தாக்கலாம் என்று அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ். தற்போது உலகமெங்கும் மக்கள் உச்சரிக்கும் ஒரே சொல் கொரோனா என்பது தான். கொரோனா தொற்றின் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றின் தாக்குதலிருந்து தப்பிக்கவே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், சினமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள் என்று மக்கள் கூடும் இடங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த கொரோனாவைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். எய்ட்ஸ், புற்றுநோயைக் கண்டு அஞ்சாத உலக சுகாதார நிறுவனம் ஏன் இதற்கு இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழக் கூடியது. காரணம் இது ஒரு தொற்று நோய் என்பதே. அதுவும் இது தொற்றக் கூடிய காலக் கட்டமும் சீக்கிரம் என்பதால் தான் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்.
யாரை வேகமாக தாக்கும்?
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவி விடக்கூடும். அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றி வருகிறது. அவர்களால் இந்த நோயின் தாக்கத்தை தாங்க முடிவதில்லை. இதனால் இறப்பை சந்திக்கின்றனர். கொரனோவும் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். நாமும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அதிகமாக பாதுகாக்க வேண்டியிருக்கிறது. உங்க வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், நோயெதிப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கொரனோ தாக்கத்தில் இருந்து காப்பாற்ற எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த வைரஸ் பாதிப்பு யாருக்கு ஏற்படும் என்பது குறித்தும் இங்கே அறிந்து கொள்ளலாம்.
பாதிப்பின் வீரியம்
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் விகிதம் 140,000 ஆக உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 73 வழக்குகள் பதிவாகியுள்ளன. எல்லாரும் ஒரே நோயால் பாதிக்கப்பட்டால் கூட அதைத் தாங்கிக் கொள்ளும் திறன் ஒருவருக்கொருவர் மாறுபட்டு வருகிறது. சிலர் இந்த தொற்றை எதிர்த்து போராடு வென்று விடுகிறார்கள். ஆனால் சிலர் உயிரை இழந்து விடுகின்றனர். சிலருக்கு உடம்பு வலி, இருமல், சளித் தொல்லை மட்டுமே உண்டாகிறது. ஆனால் சிலருக்கோ அறிகுறிகள் தீவிரமாகவும் வருகிறது. இப்படி அறிகுறிகள் தீவிரமாகக் கூடிய நபர்களாக வயதானவர்களாகவும் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் தான் அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
வயதான நபர்கள்
இந்த கொரனோ பாதிப்பால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சீன நோய்க் கட்டுப்பாட்டு மையம் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 14.8%, 70 முதல் 79 வயதிற்குள் 8% மற்றும் இடைப்பட்ட வயதான 60 முதல் 69 வயதில் 3.6% பேர்களும் இதுவரை இறந்துள்ளனர். வயதானவர்களும் நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்களும் இந்த கொரோனாவை எதிர்த்து போராடுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்கள். இவர்களுக்கு மட்டும் நிலைமை கடினமாகி நுரையீரல் பிரச்சனைகள் உண்டாகி தனிமைப்படுத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டிய சூழல் உண்டாகிறது. நாள்பட்ட மருத்துவ கண்காணிப்பு நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.
ஏற்கனவே நோய் பாதிப்பு அடைந்தவர்கள்
சிலருக்கு ஏற்கனவே இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் நோய் பாதிப்பு இருக்கும். இவர்கள் சீக்கிரமே கொரோனா பாதிப்பை பெறுகிறார்கள். இரண்டு தொற்று களும் உடம்பில் இருப்பதால் இவர்களால் மீண்டு வருவது கடினமாகி விடுகிறது. கொரோனோவால் ஏற்பட்ட இறப்பு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் 10.8% ஆகவும் நீரிழிவு நோயாளிகளின் இறப்பு விகிதம் 7.3% மற்றும் சுவாச நோய்களில் 6.3% ஆகவும் உள்ளது.
பாதுகாக்க வேண்டிய நபர்கள்
எனவே இந்த இறப்பு விகித தகவல்கள் கொரோனா வைரஸ் வயதானவர்களையும் ஏற்கனவே நோய் பாதிப்பு கொண்டவர்களையும் அதிகமாக தாக்குகிறது என்பது இதிலிருந்து தெளிவுபடுகிறது. எனவே இவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீன கட்டுப்பாட்டு மையமும் தெரிவித்து உள்ளது.
நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள்
நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா கொண்டவர்கள்
டயாபெட்டீஸ் நோயாளிகள்
எச். ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறைபாடு கொண்டவர்கள்
அதிக உடல் பருமன் உடையவர்கள்
கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்கள்
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து இருப்பவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் போன்றவர்கள் தீவிர பாதுகாப்புடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள்
குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஏற்கனவே மற்ற உடல் பாதிப்புகளை பெற்று இருப்பவர்கள் கூட்டங்களை தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது. உங்களை நீங்கள் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்ப் பாதிப்பில் இருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அனைத்து சமூக தொடர்புகளையும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்கள் தவிர்ப்பது நல்லது.
அதே மாதிரி கொரனோவால் பாதிக்கப்பட்ட நபர்களும் இது மற்றவருக்கு பரவக் கூடியது என்பதை உணர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இருப்பினும் நாம் இளமையாகவும் ஆரோக்கியமாக இருந்தால் கூட தேவையான முன்னெச்சரிக்கை அவசியம். உங்க குழந்தைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பராமரியுங்கள். உலக சுகாதார நிறுவனம் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி வாருங்கள். எல்லோர் கொடுக்கும் ஒத்துழைப்பு மட்டுமே இந்த நோயை மனிதர்களிடம் இருந்து பரவாமல் தடுக்க முடியும். நீங்கள் அதற்கு முன் உதாரணமாக செயல்பட முற்படுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...