``கலாசாலை மணி.. பரீட்சை
ஆரம்பமாகிவிட்டது. சாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும்.. போர் முடிந்தது.. இன்று போய் நாளை வா!" என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும் "ஸ்டாப் ப்ளீஸ்" என்று காவலிலிருந்த ஆசிரியர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பமாகிவிட்டது. சாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும்.. போர் முடிந்தது.. இன்று போய் நாளை வா!" என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும் "ஸ்டாப் ப்ளீஸ்" என்று காவலிலிருந்த ஆசிரியர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நான்கு வார்த்தை அதிகமாக எழுதிவிட்டால் பாஸாகி விடுவோம் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு".. எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே நிகும்பலை சிறுகதையில் தீர்க்கத்தரிசனத்தோடு எழுதியிருப்பார் புதுமைப்பித்தன். அது இன்று வரை தொடர்வது ஆச்சர்யமளிக்கிறது.
தேர்வுகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதன்முறையாக 1978-ம் ஆண்டு 10 மற்றும்+2 எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1984-85 முதல் பொது நுழைவுத் தேர்வு மற்றும் +2 மதிப்பெண் அடிப்படையில்தான் தொழிற்கல்விக்கான சேர்க்கை நடைபெற்றது. எனவே அப்போதிருந்தே தேர்வும் மதிப்பெண்ணும் மாணவ மாணவியரின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறின. தமிழ்நாடு தேர்வுத்துறை அளப்பரிய பணி ஆற்றி வருகிறது.
விடைத்தாள்
விடைத்தாளின் முகப்பு சீட்டினை மட்டும் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பெற்று வருவார். பின் அவரின் மேற்பார்வையில் கூடுதல் விடைத்தாள்கள் (Additional seat) தைக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு 30 பக்கமும் பிற பாடங்களுக்கு 38 பக்கமும் வைத்து குறிப்பிட்ட நூலில், குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட ஊசியின் மூலம் தைக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பிற்குச் சில பக்கங்கள் குறைய வாய்ப்புள்ளது. ஏதேனும் ஒரு விடைத்தாள் பழுதானாலும் அத்தலைமையாசிரியர் மட்டுமே அதைக் கொண்டு சென்று மாற்றி வேறு விடைத்தாள் வாங்கி வந்து கவனமுடன் தைத்து அதைத் தேர்வு நடத்தும் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பயணம் ஆரம்பம்
விடைத்தாளினை மாணவர்கள் எழுதி முடித்தவுடன் தேர்வுத்துறை டேக் ஆப் ஆகிவிடும். எழுதப்பட்ட விடைத்தாளினை அந்த மாவட்டப் பொறுப்பு வழித்தட அலுவலரிடம் ஒப்படைப்பார். அவர் சரிபார்த்து அதை லைசனிங் ஆபீஸரிடம் ஒப்படைப்பார். அவர் விடைத்தாளினை 15 வீதம் பிரித்து தனித்தனியாகக் கட்டி மாவட்ட நிர்வாகம் எந்த மாவட்டத்திற்கு அனுப்பப் பணிக்கிறதோ அம்மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பார்.
அனுப்பப்பட்ட விடைத்தாள்களை உரிய மாவட்ட முகாம் அலுவலரிடம் ஒப்படைப்பார்கள். அவர் சரிபார்த்து முதன்மைத் தேர்வாளரிடம் ஒப்படைப்பார்.
ஒவ்வொரு விடைத்தாளிலும் A,B,C எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் A பகுதியினைத் தேர்வு மையத்தில் சரிபார்க்கப்பட்டு அதைப் பிரித்து விடுவார்கள். பின்பு தேர்வு எழுதி முடிந்து விடைத்தாள் திருத்தும் மையத்தில் B பகுதியினைப் பிரித்து அதைக் கோப்பில் வைத்துவிடுவார்கள். எக்காரணம் கொண்டும் C பகுதியினைக் கிழிக்கக் கூடாது. அது விடைத்தாளில் மட்டுமே கடைசிவரை இருக்க வேண்டும். A, B, C மூன்று பகுதியிலும் பார்கோடு இடம்பெற்றிருக்கும்.
விடைத்தாள் மதிப்பீட்டு மையம்
ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையத்திலும் மூன்று அலுவலர்கள் இருப்பார்கள். அவர்கள் முதன்மைத் தேர்வாளர்,(Chief examiner) கூர்ந்தாய்வு அலுவலர், (scrutinising officer உதவித்தேர்வாளர் (ஆசிரியர்) மூன்று பேர் இருப்பார்கள். விடைத்தாளின் எண்ணிக்கைக்கேற்ப 6 முதல் 8 உதவி தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவர். பெரிய மாவட்டமாய் இருப்பின் கல்வி மாவட்ட அடிப்படையிலும் சிறிய மாவட்டமாய் இருப்பின் ஒரே மையமாகவும் அமைப்பார்கள்.
முதன்மைத் தேர்வரின் பணிகள்
முகாம் அலுவலரிடமிருந்து முதன்மைத் தேர்வு அலுவலர்கள் விடைத்தாள் கட்டுகளைப் பெற்றுக்கொண்டு ஒப்புகை சீட்டைச் சரிபார்க்க வேண்டும். வாங்கிவந்த விடைத்தாள்களை ஒரே நாளில் மதிப்பிட்டு, அதன் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதைக் கணக்கிட வேண்டும். விடைக்குறிப்புகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் முதல் நாளன்று முகாம் அலுவலரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும். முகாம் அலுவலர் தலைமைக்குத் தெரியப்படுத்துவார்.
மதிப்பெண்ணில் வேறுபாடு இல்லாமல் கவனமாய் மேற்பார்வை செய்வார். ஒவ்வொரு உறையையும் random selection முறையில் ஆசிரியர்களுக்கு வழங்கி பின் முழுமையாகத் திருத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பார். அலுவலர் பச்சை மையினைப் பயன்படுத்துவார்.
Part B, part C ஆகியவற்றில் கட்டுஎண், உறைஎண், வரிசை எண் மூன்றும் ஒத்துள்ளதா என்பதை உறுதிசெய்து part B யை மட்டும் பிரித்து அதில் மதிப்பெண்ணை எண்ணாலும் எழுத்தாலும் எழுதியுள்ளதை சரிபார்ப்பார்.
Part C பகுதியைப் பிரிக்கக்கூடாது. ஒரு முதன்மைத் தேர்வுக்கு 10 உதவித் தேர்வாளர்கள் என்பதன் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு பெறவேண்டும்
கூர்ந்தாய்வு அலுவலரின் பணிகள்
முதன்மைத் தேர்வாளருக்குப் பின் இடம்பெறும் அலுவலர்.
விடைத்தாள் எண்ணிக்கையைச் சரிபார்ப்பார். இவர் turkish blue எனும் சிறப்புநிற மை பயன்படுத்துவார். மதிப்பெண் வினா வாரியாக, பக்க வாரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பார். மதிப்பெண்ணைக் குறைப்பதற்கோ மாற்றி அமைப்பதற்கோ அதிகாரம் இல்லை. முதன்மைத் தேர்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.
அனைத்து விடைத்தாளினையும் மதிப்பீடு செய்வார்.
உதவித் தேர்வாளரின் பணிகள்
விடைத்தாள் திருத்தலில் இவரின் பணி முக்கியமானது. பள்ளி அளவிலான தேர்வுத்தாள் போல் எண்ணாமல் மிகுந்த அக்கறையோடு பொறுமையுடன் திருத்த வேண்டும். ஒரு விடைத்தாளினை திருத்த அரை மணி நேரம் ஆகும்.
*ஒரு நாளில் 30 விடைத்தாளினைத் திருத்துவார்கள். காலை 15ம், பிற்பகல் 15 தாளினைத் திருத்த வேண்டும்.
*தாளின் வலது மேல் ஓரத்தில் தேர்வாளர் எண், தேதி, பிரிவேளை மு.ப/பி.ப எனும் பாடவேளை எழுத வேண்டும்.
*Bundle number, cover number, script number ஆகியவற்றை B மற்றும் C பகுதி விடைத்தாளின் இடது கை ஓரத்தில் கவனமுடன் எழுத வேண்டும்.
*DGE/SSLC முத்திரை விடைத்தாளில் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பே திருத்த வேண்டும்.
*எழுதாத பக்கங்களுக்குக் குறுக்குக் கோடு இட வேண்டும்.
உதவித் தேர்வாளர்கள் சிவப்பு நிற மையைப் பயண்படுத்த வேண்டும். விடைத்தாளின் எண்ணிக்கையைச் சரிபார்த்து, விடைக்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் வலது கீழ் மூலையில் பக்கவாரி கூடுதல் எழுத வேண்டும். தவறான விடைக்கு பூஜ்ஜியம், ஒரே வினா மீண்டும் எழுதினால் repeat எனவும், மிகைவினா எழுதியிருந்தால் excess எனவும் சரிபார்த்து அடிக்க வேண்டும். விடை எழுதாமல் வினா எண் மட்டும் எழுதியிருந்தால் சிவப்பு மையினால் கோடிட வேண்டும்.
மதிப்பெண் எழுதும் போது 49.5 மதிப்பெண் வந்தால் (FOUR NINE FIVE என எழுத்தால் அந்தக் கட்டத்தில்) முழுமையாக்காமல் அதையே எழுத வேண்டும். ஒவ்வொரு விடைத்தாளிலும் மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் ஈடுபடுவார்கள்.
தொழில்நுட்ப முன்னேற்றம்
முன்பெல்லாம் விடைத்தாளிற்கு டம்மி எண் இட்டு வேறு மாவட்டத்திற்கு அனுப்பி செய்வார்கள். தற்போது தொழில் நுட்ப முன்னேற்றத்தில் தேர்வுத்துறையும் அதி நவீனத்துவமாகிவிட்டது.
திருத்தப்பட்ட விடைத்தாளினை முதன்மைத் தேர்வாளரின் பரிசீலனைக்குப் பின் MVO, (mark verification officer) மற்றும் TABULATOR எனும் இருவரிடம் பாட வாரியாக ஒப்படைப்பார்கள். இவர்கள் சரிபார்த்து விடைத்தாளினைத் தனியே பிரித்து பத்திரப்படுத்தி வைத்துவிட்டு.. PART-B பகுதியினை மட்டும் பாதுகாப்பாக மந்தன அறை (confidential room) கணினி அலுவலரிடம் தருவார்கள். அவர்கள் Part-B பகுதியில் உள்ள பார்கோட் ஸ்கேன் செய்து அந்தத் தேர்வு எண்ணிற்குரிய மதிப்பெண்ணைப் பதிவு செய்வார்கள். இது மிக மிக ரகசியமாக இருக்கும். உரிய உயர் அலுவலர் மட்டுமே அந்த அறைக்குச் செல்ல அனுமதி உண்டு.
இவ்வாறு அனைத்து மாவட்ட தேர்வர்களின் மதிப்பெண்ணைப் பதிவேற்றிய பின் குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எண்ணும், பிறந்த தேதியும் பதிவிட்டால் முடிவுகள் வெளியாகும்படி கணினியில் அமைப்பார்கள். எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் கச்சிதமாகச் செய்யும் இத்தகைய தேர்வுத் துறையின் பணிகளும், இதன் பின்னணியில் உழைக்கும் அத்தனை அலுவலர்களின் பணியும் மகத்தானது, போற்றத்தக்கது.
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...