தமிழக அரசு ஊழியர்கள் , ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர் வுகள் வழங்கப்பட்டு வந்தது . இதன்மூலம் , சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை பெற்று வந்தனர் . இந்நி லையில் , தமிழக அரசு இதுவரை வழங்கிவந்த கூடுதல் முன் ஊதிய உயர்வை ரத்து செய்வ தாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளி யிட்டுள்ள அரசாணை யில் , " தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் உயர் கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு உடனடி யாக ரத்து செய்யப்படுகிறது ” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் அரசு பணியில் உள்ளவர் கள் கூடுதல் படிப்பை காரணம் காட்டி இனி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
From WhatsApp Source:
மேற்கண்ட அரசாணையின்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அரசு ஊழியர்கள் துறைத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பவானிசாகரில் உள்ள அரசு ஊழியர்கள் அடிப்படை பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்காக Advance Increments இதுவரை வழங்கபட்டு வந்தது. இனி வருங்காலங்களில் இது போன்ற Advance increments வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியம் Increments பெறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...