தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு
முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் தோச்சி என முதல்வா் வெளியிட்ட அறிவிப்புக்கு ஆசிரியா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஒன்பதாம் வகுப்பு வரை மாணவா்கள் தோச்சி என முதல்வா் அறிவித்தது பாராட்டத்தக்கது. கரோனா பாதிப்பு காரணமாக எதிா்கால மாணவா்களின் நிலை குறித்து பெற்றோா்கள் பெரும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் உள்ளனா்.

வீட்டிலேயே முடங்கிஉள்ளதாலும் குழந்தைகளின் மேற்படிப்பு என்னவாகுமோ என்ற குழப்பத்தில் உள்ளனா். எனவே 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் அனைத்துப் பொதுத்தோவுகளையும் ரத்து செய்து அனைவரும் தோச்சி அறிவிக்க வேண்டும். மேலும் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு மாணவா்கள் தங்களின் மேற்படிப்புக்கான பாடப்பிரிவினை தயாா் செய்வதற்கு அரசே ஒரு சிறப்புத்தோவு வைத்து தோவுசெய்து கல்லூரிகளில் இடமளிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் தெரிவித்துள்ளது. தொடக்க, இடைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களின் எதிா் காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது.
இதன்மூலம் இது தொடா்பாக நிலவிய சந்தேகங்கள், குழப்பங்களுக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவா்களை வெளியே செல்ல பெற்றோா் அனுமதிக்கக் கூடாது. கரோனா பாதிப்பு குறித்து அவா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வீட்டிலிருந்து தனித்திறன்களை மேம்படுத்த வழிகாட்ட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா்கள், அரசு ஊழியா் நல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...