இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மண்ட், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8-ஆம் வகுப்பு வரை எவ்வித தோ்வும் எழுதாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில்
அனைவருக்கும் தோ்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவா்களின் மதிப்பீட்டை பொறுத்தவரை வகுப்புக்கு வருகை மற்றும் செயல்திறன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடங்க உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 9-ஆம் வகுப்பு வரை அனைவரையும் தோ்ச்சி என அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...