மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் ( LKG & UKG ) , அங்கன்வாடி மையங்கள் , அரசு தொடக்கப்பள்ளிகள் ( 5ம் வகுப்பு வரை ) , தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் தொடக்கப்பள்ளிகள் ( 5ம் வகுப்பு வரை ) , CBSE பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ , மாணவியர்களுக்கும் 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது .
மேலும் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் ( MALL ) 31 . 03 . 2020 வரை மூடப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு . இரா . கண்ண ன் இ . ஆ . ப . , தெரிவிக்கிறார் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...