கொரோனா வைரஸ் பாதிப்பு
ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'தமிழக மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என முதல்வர் பழனிசமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறையும் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் அண்டை மாநிலங்களை ஒட்டிய 16 மாவட்டங்களில் தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களான 'மால்'களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'தமிழக மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என முதல்வர் பழனிசமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறையும் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் அண்டை மாநிலங்களை ஒட்டிய 16 மாவட்டங்களில் தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களான 'மால்'களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
'கொரோனா' வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்; நுாற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளர். கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஒருவருக்கு கொனோரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவரும் தீவிர சிகிச்சைக்கு உடல் நலம் தேறி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர் வாயிலாக வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் 'தமிழக மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர் பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி:
* பொதுமக்கள் 15 நாட்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும் பொது இடங்களில் அதிகம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டோர் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்
* பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேணவும் குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும் அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம்
* விடுமுறை நாட்களின் போது குழந்தைகள் குழுவாக விளையாடாதபடி பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்
* கொரோனா வைரசை தடுக்கும் முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால் தான் வெற்றிபெற முடியும். இதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இவ்வாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தியேட்டர், மால்கள் மூடல்:
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழலையர் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநில எல்லையோர மாவட்டங்களின் பள்ளிகளுக்கு ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும்மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியா குமரி, திருப்பூர், கோயம்புத்துார், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி மற்றும் விருதுநகரில் உள்ள சினிமா தியேட்டர்களையும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் மார்ச் 31 வரை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுக்க எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விபரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
*சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பயணியர் வருகின்றனர். சில வெளிநாட்டு பயணியர் வருகையை மத்திய அரசு தடை செய்துள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகள் அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன
* அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் துாய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வருவாய் காவல் போக்குவரத்து மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது
* மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் துாய்மை பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் தனி அலுவலர்களைநியமிக்கவும் ஊரகவளர்ச்சி நகராட்சி நிர்வாகத்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது
* கோவில்கள் மசூதிகள் தேவாலயங்களுக்கு வருவோருக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும் சளி இருமல் காய்ச்சல் உள்ளோர் வருவதை தடுக்கவும் தகுந்த நடவடிக்கைளை எடுக்கும்படி ஹிந்து சமய அறநிலைத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பார்கள், நடன கிளப்கள் மூடல்?
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள் மூடப்படுகின்றன. பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. மதுக்கடை பார்களில் சுகாதாரம் இல்லாத நிலை உள்ளது. எனவே மதுக்கடை பார்கள் நட்சத்திர விடுதிகளின் பார்கள் ஆண் பெண்கள் கைகோர்த்தும் கட்டி பிடித்தும் நடனமாடும் கிளப்கள் போன்றவற்றையும் மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்புக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிர்வாக கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தினந்தோறும் வருவாய் நிர்வாக கமிஷனருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அவர் அந்த அறிக்கைகளை தொகுத்து சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் சமர்ப்பிப்பார்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில பேரிடர் நிதியிலிருந்து 60 கோடி ரூபாய் நிதியை பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சுகாதாரத்துறைக்கு 30 கோடி ரூபாய்; போக்குவரத்து துறைக்கு 5 கோடி; சென்னை மாநகராட்சிக்கு நான்கு கோடி; நகராட்சி நிர்வாகத்துக்கு ஆறு கோடி; ஊரக வளர்ச்சி துறைக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...