ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .
1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்றப் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 ( பி ) குற்றக் குறிப்பாணைகள் , 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும் , பணி ஓய்வும் , பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . இந்த 17பி குற்றக் குறிப்பாணைகளை இரத்து செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர் , மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் 16 . 03 . 2020 அன்று மனு அளித்தல்
2 ) 24 . 03 . 2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் ( பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலம் , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ) ஆகியோரைச் சந்தித்தல்
3 ) ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் திரு . இரா . தாஸ் , திரு . மு . அன்பரசு , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது .
4 ) மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 11 . 04 . 2020 அன்று சென்னையில் நடைபெறும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...