திருக்குறள்
அதிகாரம்:கல்வி
திருக்குறள்:397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
விளக்கம்:
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?
பழமொழி
Cast no dirt into the well that gives you water
உண்ட வீட்டிற்கு இரண்டகம்
பண்ணாதே.
இரண்டொழுக்க பண்புகள்
1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.
2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.
பொன்மொழி
விதியின் மீது பழி போடும் ஒருவர் தன் செயலின்பால் தன்னம்பிக்கை இல்லாதவர் ஆவார்.....பெரியார்
பொது அறிவு
1 . சர்வதேச நாடுகளிடம் இருந்து அதிகமான பொருளாதார உதவி பெற்று உள்ள நாடு எது?
இந்தியா.
2. ஆசியாவிலேயே மிகப்பெரிய மரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கு உள்ளது?
அந்தமான்
English words & meanings
Incite - to encourage somebody to do something. ஒன்றை செய்யுமாறு ஒருவரைத் தூண்டுதல்
Insight - an inner knowledge of understanding something. ஒன்றை குறித்து அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு.
ஆரோக்ய வாழ்வு
சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் .காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
Some important abbreviations for students
ESN - Electronic Serial Number
VPN - Virtual Private Network
நீதிக்கதை
பஞ்சதந்திரக் கதைகள்
உண்மைக்குக் கிடைத்தப் பரிசு
ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர்.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள்.
அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீர்ரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார்.
ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.
உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தர். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.
ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவோம் அறிவியல்
கண்ணாடி.
* இது மணலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
*100%மறுசுழற்சி செய்ய முடியும்
*மின்னல் மணலை தாக்கும் போது இயற்கையில் கண்ணாடி உருவாகிறது.
*கண்ணாடி மூன்று நிலையிலும் இல்லை. இது குளிரும் போது உருவமற்ற திண்மம் உருவாகிறது. இது மூலக்கூறுகள் தங்களுக்குள் இயங்க அனுமதிக்கிறது.
கணினிசூழ் உலகு
மொபைலிலேயே YouTube channel எப்படி ஆரம்பிப்பது & எப்படி வீடியோ upload செய்வது என்பதை பற்றிய காணொலி
காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய செய்திகள்
05.03.20
★ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக இருந்த ஜிஐசாட்-1 செயற்கைக்கோள், தொழில்நுட்பக் காரணங்களுக்காகத் தள்ளி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
★இந்தியாவில் கோவிட்-19(கரோனா வைரஸ்) வேகமாக பரவி வருவதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
★ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இணைந்து வைஃபை, ப்ளூடூத்தில் இயங்கும் கூலரைக் கண்டுபிடித்துள்ளனர்.
★இந்தோனேசியாவில் மவுண்ட் மெரபி எரிமலை வெடிக்க தொடங்கியதன் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்குவிமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
★மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் 16 வயது ஷஃபாலி வர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
★ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரா்கள் கௌரவ் சோலங்கி, ஆஷிஷ் குமாா் வெற்றி.
Today's Headlines
🌸ISRO has announced that the GISAT-1 satellite, which is said to be launched by the GSLV-F10 rocket, is being postponed for technical reasons.
🌸Due to the rapid spread of covid-19 (corona virus) in India, surveillance has been intensified at Chennai, Trichy, Madurai and Coimbatore airports.
🌸 Two Rajasthan University students have discovered cooler running on Wi-Fi and Bluetooth.
🌸The Mount Merapee volcano has started to erupt in Indonesia due to bad weather. Due to this the flights have been canceled.
🌸India's 16-year-old Shafali Verma tops the ICC T20 rankings with a fine performance at the Women's T20 World Cup.
🌸 Indian Boxer Gaurav Solanki and Ashish Kumar win the qualifying round in the Asian Olympic Boxing .
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...