தேர்வு முறைகேடு விவகாரத்தால், ஐந்து ஆண்டுகள் வரை நடந்த தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் துவங்கிஉள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில், பல்வேறு முறைகேடுகள் நடந்து, அரசு வேலையில் நுாற்றுக்கணக்கானோர் சேர்ந்துள்ளனர். அம்பலம்'குரூப் - 4, குரூப்- 2 ஏ, குரூப்- 2, குரூப் - 1' மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் போன்ற தேர்வுகளில், தேர்வு முறைகேடு, விதிமீறல் என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.குரூப் - 4 முறைகேடுகள், ஊடகங்கள் மற்றும் சில பயிற்சி மைய நிர்வாகிகளின் முயற்சியால், அம்பலமாகி உள்ளன. இந்த வழக்குகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., நடத்திய விசாரணையில் சங்கிலி தொடர் போல, இடைத்தரகர்களும், அரசு ஊழியர்களும், தேர்வர்களும் சிக்கி வருகின்றனர்.
கடந்த, 2019ல் நடந்த, குரூப் - 4 தேர்வில் முறைகேடுகளின் மூளையாக செயல்பட்ட, இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக, சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது. பல தேர்வர்களும், அரசு ஊழியர்களும், தலைமை செயலக ஊழியரும் போலீசால் கைது செய்யப் பட்டு உள்ளனர்.
சிக்கியவர்களில் சில இடைத்தரகர்களும், அரசு ஊழியர்களும், 2018ல் நடந்த குரூப் - 2 தேர்விலும், 2017ல் நடந்த குரூப் - 2 ஏ தேர்விலும், முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகிஉள்ளது.
இதுகுறித்தும், போலீசார் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
இன்னும் சிக்குவர் தற்போது, பூகம்பமாக வெடித்திருக்கும் இந்த விவகாரத்தில், அடுக்கடுக்கான மோசடிகள் அம்பலமாவதால், ஐந்து ஆண்டுகளாக நடந்த தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகளை ஆய்வு செய்து விசாரிக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
இதற்காக, டி.என்.பி.எஸ்.சி.,யில் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளது. குரூப் - 4 முறைகேடில் சிக்கியுள்ள போலீசார், அரசு ஊழியர்கள், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள் ஆகியோர், பணியில் சேர்ந்த காலம் முதல், தேர்வு முடிவுகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்கான, 'ரேங்க்' பட்டியல் மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், இன்னும் பல தேர்வர்கள் சிக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...