தமிழ்நாடு
முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என
இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராம ஊராட்சி, ஒன்றிய, மாவட்டக்
கவுன்சிலர் பதவிகளுக்கான நேரடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர்
மாதம் 2 கட்டமாக நடைபெற்றது.
ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைக் கொண்ட நகர்ப்புற உள்ளாட்சிக்கானத் தேர்தல் தேதி இன்னும்அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், திருச்சி
மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, துவாக்குடி, மணப்பாறை, துறையூர் ஆகிய 3
நகராட்சிகள், 16 பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம்
252 கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான
விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...