உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள்
ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில்
எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும்
பிரச்சனை என்ற அறிகுறியாகும்.
நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.
சிலருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம். அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும். சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும்.
கை, கால் மரத்து போகும் பிரச்சனை உள்ளவர்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அதேபோல் வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.
இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...