மத்திய அரசு வருமான வரி விதிப்பு முறையில் இரண்டு ஆப்சன்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. அதாவது பழைய வரி விதிப்பு முறை என்னவென்றால் 5லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரி கட்ட வேண்டும்.
ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் அதாவது ஆண்டுக்கு 10 லட்சம் சம்பளம் வாங்குவோர் 30 சதவீதம் வரி கட்ட வேண்டும். இதுவே பழைய வரி விதிப்பு முறை. 2019-2020 நிதியாண்டு வரை இதுவே முறையாக இருக்கிறது.
இந்த முறையின் கீழ் நீங்கள் எல்ஐசி பீரிமியம், குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், பிஎப் பணம், வீட்டு வாடகை, பணத்தை வங்கியில் முதலீடு செய்து போன்ற காரணங்களை கூறி வருமான வரி விலக்கு பெற முடியும்.
ஆனால் இனி வரும் நிதியாண்டில் இருந்து, அதாவது 2020 -21 நிதியாண்டில் இருந்து புதிய வருமான வரி விதிப்பின் படி கல்வி கட்டணம், பிஎப் பணம், வீட்டு வாடகை போன்ற பழைய முறையின் வருமான வரி விலக்கு கோர முடியாது.
ஆனால் புதிய வருமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்தால் 5லட்சம் முதல் 7.5லட்சம் வரை வருமானம் (சம்பளம்) உள்ளவர்கள் 10 சதவீதம் வரி கட்டினால் போதும். முன்பு 20 சதவீதம் கட்டியிருப்பார்கள். அதேபோல் 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 15 சதவீதம் வரி கட்டினால் போதும். முன்பு இவர்கள் 20 சதவீதம் கட்டினார்கள்.
இதேபோல் 10 முதல் 12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இதுவரை 30 சதவீதம் வரி கட்டிய நிலையில் இனி 20 சதவீதம் கட்டினால் போதும் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது இவர்கள் வருமான வரி விலக்கு கோராவிட்டால் இந்த சலுகையை தேர்வு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு வருமான வரி விலக்கு கேட்பதை முடிவுக்கு கொண்டு வர விரும்புவது தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...