Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த நடிகர் சூர்யா, முதலமைச்சர், அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.!

IMG_ORG_1580920169103
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அரசாணை வெளியிட்டிருந்தார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 2020-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13 09 2019 அன்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசாணைகள் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பெறப்பட்டது. அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் சூர்யா, 'படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive