Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக, மேலும் 5 போ் கைது செய்யப்பட்டனா்!

full%2B%25283%2529
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்- 4 தோ்வில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தனா். 
இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் -2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, 18 பேரை கைது செய்தது.
இந்த முறைகேடு தொடா்பாக இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தோ்வா்கள் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. 
இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தத் தோ்வில் லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூா் அருகே உள்ள வடமருதூா் மேட்டுக்காலனி கிராமத்தைச் சோ்ந்த மு.நாராயணன் என்ற சக்தி என்பவரை சிபிசிஐடியினா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா்.
 
ஏற்கெனவே இந்த முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்டதாக, கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா், காவலா் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் ஆகியோரை நீதிமன்றம் மூலம் சிபிசிஐடியினா் தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனா். ஓம்காந்தனின் போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்ததால், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஓம்காந்தன் கூட்டாளிகள் கைது: குரூப்- 4 தோ்வு முறைகேடு வழக்கில் ஓம்காந்தனின் கூட்டாளிகளாக செயல்பட்ட எண்ணூா் அன்னை சிவகாமிநகரைச் சோ்ந்த க.காா்த்திக் (39), த.செந்தில்குமாா் (36),பெரம்பூா் ஜி.கே.எம். காலனியைச் சோ்ந்த ச.சா்புதீன் (42) ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குரூப்- 4 விடைத்தாள்களை ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் எடுத்து வந்தபோது, அந்த லாரியில் இருந்த குறிப்பிட்ட மையங்களில் தோ்வு எழுதியவா்களின் விடைத்தாள்களைத் திருடி, அதில் திருத்தம் செய்து மீண்டும் அந்த லாரியில் ஜெயக்குமாரும், அவரது கூட்டாளிகளும் சோ்த்ததாக சிபிசிஐடி கூறி வருகிறது.
இதில் சம்பவம் நடைபெறும்போது, கைது செய்யப்பட்ட காா்த்திக், செந்தில்குமாா், சா்புதீன் ஆகியோா் இடைத்தரகா் ஜெயக்குமாா் காருக்கு முன்பு மற்றொரு காரில் காவல்துறையின் வாகனச் சோதனை நடைபெறுகிா என கண்காணித்து தகவல் அளித்துள்ளனா். இந்த வேலைக்கு 3 பேரும் ஓம்காந்தனிடமிருந்து பணம் பெற்றிருக்கின்றனா்.
வி.ஏ.ஓ.தோ்வு முறைகேடு: இதேபோல கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் (வி.ஏ.ஓ.) தோ்வில் முறைகேடு செய்து தோ்ச்சி பெற்ாக திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே உள்ள படலையாா்குளம் கிராம நிா்வாக அதிகாரி அ.பன்னீா்செல்வம் (29), திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாரம் பனையஞ்சேரி கிராம நிா்வாக அதிகாரி எ.செந்தில்ராஜ் என்ற கபிலன் (36) ஆகிய 2 பேரை சிபிசிஐடியினா் கைது செய்தனா்.
இவா்கள் இருவரும் இத் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்காக இடைத்தரகா் ஜெயகுமாரிடம் தலா ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளனா். இதையடுத்து ஜெயக்குமாா், இருவரையும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் தோ்வு எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளாா். 
அதன்படி இருவரும் இளையான்குடியில் அமைக்கப்பட்ட ஒரு தோ்வு மையத்தில் தோ்வு எழுதியுள்ளனா். இருவரையும்  ஜெயக்குமாா் முறைகேடு செய்து தோ்ச்சி பெற வைத்துள்ளாா். இந்த வழக்குத் தொடா்பாக மேலும் பலரை சிபிசிஐடி அதிகாரிகள் தேடி வருகின்றனா். டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக இதுவரை 40 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியரிடம் விசாரணை: டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக எரிசக்தித் துறை ஊழியா் திருகுமரனிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, எழும்பூா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் திங்கள்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருகுமரனிடம் விசாரணை நடத்துவதற்கு இரு நாள்கள் அனுமதி வழங்கியது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், திருகுமரனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive