Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5 & 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - விவாத மேடை

இன்றைய விவாத மேடை

ஒரு பக்கம் தேர்வு வேண்டும் என்று பேசும் குழந்தைகள் , பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒரு பக்கம் . தேர்வு வேண்டாம் என்ற கருத்தைப் பதிவு செய்ய அதே போல 5 , 8 வகுப்பு பயிலும் குழந்தைகள் , பெற்றோர் , ஆசிரியர் இன்னொரு பக்கம். பொதுத் தேர்வு குறித்து என்னவென்றே புரியாத குழந்தைகள் கேட்ட கேள்விகள் நம்மை நடுங்க வைத்தன.

டிவிஸ்ட் பண்ணி கேள்வி கேட்பாங்க அதான் பொதுத் தேர்வு என்கிறான் ஒரு 10 வயது மாணவன் . ஒரே புத்தகம் , ஒரே தேர்வு , ஒரே கேள்வித் தாள் இது தான் பொதுத் தேர்வு என்று கூறுகிறது ஒரு குழந்தை .மால் பிராக்டிஸ் எதுவும் பண்ணக் கூடாது என்றும் , இந்த 8 ஆம் வகுப்பு மதிப்பெண்ணையும் வேலைக்கு கணக்குல எடுத்துக்குவாங்களான்னு ஒரு குழந்தை கேட்குது. 

ஒரு பக்கம் ஒரு டீச்சர் LKG இலிருந்து டிரெய்ன் பண்ணனும் , தேர்வு 5 ஆம் வகுப்பில் இருந்தால்  தான் நல்லது என்று சொல்லி மிரள வைக்கிறார்.

ஒரு பெற்றோரோ கண்டிப்பா 5 ஆம் வகுப்பு மட்டுமல்ல முதல் வகுப்பில் இருந்தே பொதுத் தேர்வு வேண்டும் என்கிறார். 

குழந்தைகளை பயமின்றி தேர்வு எழுதுங்கள் என்று கூறினேன் . மதிப்பீட்டு முறை CCE நல்லதொரு திட்டம் , அதுவே சிறந்த முறை .அதை ஆசிரியர்கள் உறுதிப் படுத்த வேண்டும் . மாணவர்களைத் தகுதியுடையவராக ஆக்குவது ஆசிரியர்கள் பொறுப்பு . தேர்வின் மறுபுறம் நிர்வாக சிக்கல்களும் ஏராளமாக உள்ளன ..என்றே பேசி வந்தேன் .

புரிதலற்ற சமூகத்தை உருவாக்கிய கல்வி முறையைக் குற்றம் சொல்வதா ? காவு வாங்க காத்திருக்கும் தேர்வுத் தடங்களை அழிக்க முயல்வதா ? வருத்தமுடன் …

உமா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive