Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைப்பு முக்கிய பாடங்களில் 40% திறனறி கேள்விகள் இடம்பெறும் மெல்ல கற்கும் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது என தேர்வுத் துறை தகவல்




*.தேசிய நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பொதுத்தேர்வு வினாத்தாளில் 40 சதவீதம் வரை திறனறி கேள்விகள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

*.தமிழக பள்ளிக்கல்வியில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இந்த வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான செய்முறைமற்றும் திருப்புதல் தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.

*.இதற்கிடையே வழக்கத்துக்கு மாறாக நடப்பாண்டு பொதுத்தேர்வில் திறனறி கேள்விகள் அதிகளவில் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

*.இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே அடுத்த கட்ட உயர் படிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.

*.மேலும், நீட், ஜேஇஇ, சிஏ உட்பட தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.

*.இதை தவிர்க்கவே பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் பாடங்களுக்கான வினாத்தாள் கட்டமைப்பு (ப்ளூ பிரின்ட்) வழங்கப்படவில்லை.

*.ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பு குறித்த புரிதல் கிடைப் பதற்காக மட்டுமே மாதிரி வினாத் தாள் வெளியிடப்பட்டது.

*.அதேநேரம் மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பொதுத்தேர்வு கேள்வித்தாள் இருக்காது.

*.எந்த பாடத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். இந்தாண்டு கல்லூரி பேராசிரியர்கள் மேற்பார்வையின்கீழ் திறமையான ஆசிரியர்கள் குழுவை கொண்டு பாடவாரியாக வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

*.அதனால் நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சற்று கடின மாகவே இருக்கும். கணிதம், விலங் கியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும்.

*.அதில் 10 முதல் 20 சதவீதம் வரையான வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அதனால் மாண வர்கள் பாடப்புத்தகங்களை மட்டு மின்றி பாடங்கள் சம்பந்தமாக விரி வாக படிக்க வேண்டியது அவசியம்.

*.மேலும், சென்டம் எடுக்கும் மாண வர்களின் எண்ணிக்கை குறையும்.

*.அதேநேரம் மெல்ல கற்கும் மாணவர் களின் தேர்ச்சி பாதிக்கப்படாது. அவர்கள் தேர்ச்சி பெறக்கூடிய வகை யிலான வினாக்களுக்கும் கணிசமான பங்களிப்பு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive