Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா?

2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு  நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்து

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்  நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது மத்திய அரசு

தமிழக அரசும் அதனை ஏற்று தமிழகத்திலும் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத்த்திற்கு பணியில் பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது, புதிய பங்களிப்பு ஓய்வூதியம் என்பது ஓய்விற்கு பிறகு அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில் இருந்து 10% விழுக்காடு பிடித்தம் செய்து அதே தொகையை அரசு செலுத்தி அந்த தொகையை மட்டும் தான் ஓய்விற்கு பிறகு வழங்கிப்படுகிறது, பழைய ஓய்வூதிய திட்டத்தில் அப்படி இல்லை மாத ஊதியத்தில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பிடித்தம் செய்துக்கொள்ளலாம் அந்த தொகையில் நாம் அவ்வப்போது நமது தேவைக்கு முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம், ஓய்விற்கு பிறகு மாதாமாதம் குடும்ப ஓய்வூதியம், குறிப்பிட்ட விழுக்காடு ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது அதோடு  பணிக்கொடையும் வழங்கப்பட்டு வருகிறது

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% விழுக்காடு பிடித்தம் அதே தொகையை அரசு செலுத்தினாலும் இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ரூ.10 லட்சத்தை இதுவரை தாண்டவில்லை,  தவிர  வேறு எந்த பயனும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகின்றனர், இந்த தொகை அவர்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை கழிக்க உதவியாக இல்லை, காரணம் தன் பிள்ளைகளுக்கு பங்கிடவும் பெற்ற கடனை திருப்பி செலுத்த  மட்டுமே சரியாகிவிடுகிறது , ஓய்விற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே

ஓய்விற்கு பிறகு  பிடித்தம் செய்யும் தொகையில் குறைந்தது மாதம் ரூ 10 ஆயிரமாவது ஓய்வூதியமாக வழங்கினால்  அவர்கள் மனைவியுடனும் கணவருடனும்  பட்டினியின்றி யார் தயவுயின்றி எஞ்சிய காலத்தை கழிக்க பேருதவியாக இருக்கும், எங்கள்  எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய  திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த 2003ம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றோம், ஆனால் அரசு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய குழுவை அமைத்தது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதன் காரணமாக பலமுறை கோரிக்கை ஆர்பாட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்காத  சூழ்நிலையில் தான் சென்ற ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தன் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்கள்

போராட்டம் அரசை எதிர்த்து அல்ல, வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினாலாவது அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்கள் நியாமான கோரிக்கயை ஏற்று நிறைவேற்றாத  என்ற எண்ணத்தில் தான்  போராட்டம் நடத்தினோம், மாறாக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டது,அரசு  பணியிடை நீக்கம் செயதவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொண்டது, ஆனால் அவர்கள் மீதுள்ள வழக்குகள் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை இதுவரையில் திரும்ப பெற வில்லை

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்று நிதி அமைச்சர் அவர்கள் எங்கள் நியாயமான எதிர்கால வாழ்வாதார  கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவற்கான அறிவிப்பை 2020 - 2021 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள்  எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றவும்

மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தும் மற்றும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454045




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive