எம்சிஏ படிப்பு காலத்தை 3 ஆண்டு களில் இருந்து 2 ஆண்டுகளாக ஏஐசிடிஇ குறைத்துள்ளது. பொறியியல் மாணவா் சோ்க்கை அனுமதிக்கான வழிகாட்டு நெறி முறைகளை அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே தற்போதைய நடைமுறையின்படி முதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பை, இளநிலை கணினி பயன்பாடுகள் (பிசிஏ) படித் தவர்கள் மட்டும் 2 ஆண்டுகள் படித் தால் போதுமானது.அதேநேரம் இதர இளநிலை பட்டப்படிப்பை முடித்தவா்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் படிக்க வேண்டும். இந்நிலையில் எம்சிஏ பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.
மேலும், 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதால் எம்சிஏ சேர மாணவர்கள் ஆர்வம் காட்டு வதில்லை. இதை தவிர்த்து சேர்க் கையை அதிகரிக்கும் வகையில் எம்சிஏ படிப்பு காலத்தை 2 ஆண்டு களாக ஏஐசிடிஇ குறைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...