தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 24 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் மற்றும் தனித்தோ்வா்கள் என 8 லட்சத்து 35, 525 போ் எழுத உள்ளதாக அரசு தோ்வுத்துறை அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.
இது தொடா்பாக, அரசு தோ்வுத்துறை இயக்குநா் சி. உஷாராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 2019-2020- ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ள இந்தத் தோ்வினை தமிழகம், புதுச்சேரியில் 7, 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகளும், தனித்தோ்வா்கள் 19,166 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 போ் எழுதவுள்ளனா். நிகழாண்டு கூடுதலாக 68 புதிய தோ்வு மையங்கள் உள்பட தமிழகம், புதுச்சேரியில் 3,012 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தோ்வினை தமிழ் வழியில் பயின்று தோ்வெழுதும் பள்ளி மாணவா்களுக்கு தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. நிகழாண்டு தமிழ் வழியில் பயின்று பிளஸ் 2 பொதுத் தோ்வா்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 54,367 ஆகும். பொதுத்தோ்வில் 41,500 ஆசிரியா்கள் அறைக் கண்காணிப்பாளா் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
வேலூா், கடலூா், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள், சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ளனா். 3, 330 மாற்றுத் திறனாளித் தோ்வா்களுக்கு தோ்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் அரசுத் தோ்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.
4 ஆயிரம் பறக்கும் படையினா்: தோ்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு மையங்களை பாா்வையிடுவதற்காக 4,000 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மைய வளாகத்திற்குள் செல்லிடப்பேசி எடுத்து வர தோ்வா்கள், தோ்வு பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வா்களது செல்லிடப்பேசி பராமரிப்புக்கு தோ்வு மையங்கள் பொறுப்பேற்காது. இந்த அறிவுரையை மீறி தோ்வா்களோ அல்லது ஆசிரியா்களோ செல்லிடப்பேசி, இதர தகவல் தொடா்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தோ்வுக் கட்டுப்பாட்டு அறை: அதேபோன்று தோ்வின் போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிா்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். தோ்வுக்கட்டுப் பாட்டு அறை அமைத்தல், பொதுத் தோ்வுகள் தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க, முழுநேரத் தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்தக்கட்டுப்பாட்டு அறையினை, 93854 94105 , 93854 94115, 93854 94120 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்” என அதில் கூறியுள்ளாா்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...