அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்
1. ஆய்வு அலுவலரிடமிருந்து உரிய எழுத்துப்பூர்வமான ஆணை பெற்றவுடன் அந்தந்தத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் .
2.அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு குறித்த அனைத்து அறிவுரைகளையும் சரியாக பெற்றுக் கொண்டு , தங்களது தொலைபேசி / அலைபேசி எண்ணைக் கண்டிப்பாக முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளிக்க வேண்டும் .
3.ஒவ்வொரு தேர்வு நாளன்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் + 1 / + 2 / SSLC 8 . 45மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . உடன் தங்களது அலைபேசியினை Switch off செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் .
4.அவ்வாறு தத்தமது அலைபேசிகளைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்காமல் , தம்முடன் தேர்வறையில் அறைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் வசம் வைத்திருப்பதாகப் பின்னர் கண்டறியப்பட்டால் , அன்னார் மீது கடுமையான துறை நடவடிக்கை எடுக்கப்படும் .
5.முதன்மைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையைக் கண்டிப்பாக அணிய வேண்டும் .
6.அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வுப் பணிக்கு வந்தவுடன் தேர்வுகட்டுப்பாட்டு அறையில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு , குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறை எண்ணிற்குரிய விடைத்தாள் மற்றும் அறைக்குரிய வருகைப்பட்டியல் அடங்கிய துணி / ரெக்சின் பையினை எடுத்துக் கொள்ள வேண்டும் .
7.அறைக் கண்காணிப்பாளர் தான் எடுத்த உறையில் உள்ள விடைத்தாட்களை வெளியே எடுத்து உறையின் மீதுள்ள தேர்வு எண்ணும் , விடைத்தாளின் முகப்புச் சீட்டில் உள்ள தேர்வு எண்ணும் , தேர்வர் வருகைச் சீட்டில் உள்ள தேர்வு எண்ணும் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் முதன்மைக் கண்காணிப்பாளரின் ஒப்ப உருவ நேர்படி ( FACSIMILE ) உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் . அன்றையத் தேர்வுப் பாடத்திற்குரியதேவையான எண்ணிக்கையில் கூடுதல் விடைத்தாட்களை முதன்மைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் .
8 . விடைத்தாளின் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளனவா என்பதைப் பிற்சேர்க்கை 7ன் படி சரிபார்த்தப் பின்னர் முகப்புத் தாளின் A பகுதியின் வலது புறத்தில் Verified எனக் குறிப்பிட்டுக் கையொப்பம் இட வேண்டும் . தேர்வு துவங்குவதற்கு முன் எக்காரணம் கொண்டும் அனைத்து முதன்மை விடைத்தாட்களிலும் துளையிடும் கருவி கொண்டு துளையிடக் கூடாது . கூடுதல் விடைத்தாட்கள் பயன்படுத்தும் போது மட்டும் தேர்வர்களின் முதன்மை விடைத்தாளையும் , கூடுதல் விடைத்தாட்களையும் துளையிடும் கருவி கொண்டு துளையிட்டு சேர்த்துக் கட்ட வேண்டும் .
9 . முதன்மைக் கண்காணிப்பாளர் + 1 / + 2 / SSLC 9 . 30மணிக்கு வழங்கக் கூடிய வினாத்தாள் கட்டுகளைப் பெற்று , தேர்வு நாள் , தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வறைக்குரிய பாடம் , ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும் . தேர்வு அறைக்குச் செல்லும் முன்பாக , முதன்மை விடைத்தாள் , கூடுதல் விடைத்தாள் , தேர்வர் வருகைச் சீட்டு , வினாத்தாள் , வினாத்தாள் கட்டினைப் பிரிப்பதற்கான மடக்குக் கத்தி ஆகியவை சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...