Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியது.!




தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்
பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரைநடைபெறுகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு கோவையில் புதன்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்படிக்கும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "பொதுத்தேர்வு எழுதும் மேலும், பிளஸ்1 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 235 மையங்களில் இரண்டு கட்டங்களாக இத்தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வைப் போலவேதேர்வு கண்காணிப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என பல்வேறு பிரிவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

21-ம் தேதி எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் கண்காணிப்பு, வினாத்தாள் அனுப்புவதை ஒளிப்பதிவு செய்தல் ஆகிய பணிகளும் நடக்கின்றன" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive