Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு?


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை தொடர்ந்து, குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. முறைகேடாக வெற்றி பெற்ற பலர் அரசு பணியில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதால் விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதுதொடர்பாக பிடிபட்ட தாசில்தார்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஏற்பட்டிருக்கின்ற முறைகேடு அம்பலமாகி இருப்பதன் காரணமாக இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 1 மற்றும் 2 தேர்விலும் கூட முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதில் ஒரு வினாத்தாள் 12 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே இந்த முறைகேட்டின் அடிப்படையில் தேர்வானவர்கள் பல்வேறு அரசு பொறுப்புகளில் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்டமாக விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் அழியக்கூடிய மையால் எழுதி முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடையானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வானது நடைபெற்றுள்ளது. இதில் ராமநாதபுரம், கீழக்கரையில் 100 இடங்களில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வெழுதியுள்ளனர். தொடர்ந்து, இவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியிருப்பார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மறு தேர்வானது நடைபெற்றிருக்கிறது. அதில் சரியான பதில் அளிக்காததன் காரணமாக பல்வேறு சந்தேகங்கள் டி.என்.பி.எஸ்.சிக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலே நடைபெற்ற விசாரணையில் 100 பேர் கொண்ட தரவரிசை பட்டியலில் தேர்வாகியுள்ளவர்கள் முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

அதாவது அழியக்கூடிய மையில் அவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதற்கு இடைத்தரகர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இதையடுத்து,  போது 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு, 2 தாசில்தார்களிடம் விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக 2017 - 2018ம் ஆண்டுகளிலும் குரூப் 2A என்ற நேர்முக தேர்விலும் மற்றும் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூட புகார்கள் எழுந்திருக்கிறது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 1, 2 தேர்வுகள் எழுதப்பட்டிருப்பதில் முறைகேடு இருக்கிறதா? என்பதற்கான அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதில் ஒரு வினாத்தாள் 12 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive