அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணித்தெரிவிற்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 12 / 2019 , நாள் . 28 . 08 . 2019 மற்றும் 04 . 10 . 2019 அன்று வெளியிடப்பட்டது .
1) மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 30 . 10 . 2019 என அறிவிக்கப்பட்டு 15 . 11 . 2019 மாலை 5 . 00 மணி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டது .
2 ) மேலும் , அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பக்கட்டணம் செலுத்தாத 804 விண்ணப்பதாரர்கள் மற்றும் பணி அனுபவச் சான்று பதிவேற்றம் செய்திடாத 174 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அவர்களின் பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்திடவும் , விண்ணப்பக் கட்டணம் செலுத்திடவும் 19 . 12 . 2019 முதல் 21 . 12 . 2019 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது .
3 ) இந்நிலையில் , அப்பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ள கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் ( கல்வியியல் கல்லூரிகள் தவிர்த்து ) இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் கூடுதல் விவரங்களை 22.01.2020 முதல் 28.01.2020 மாலை 5 மணி வரை இணையவழி மூலமாக தவறாது பதிவேற்றம் செய்திட வேண்டும் எனவும் , எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
Document upload Page - Click here...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...