Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Eslc - 8 ஆம் ஏப்.2020 பொதுத்தேர்வு - தனித்தேர்வர்களுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் முறை!




ஆன் - லைன் ( Online ) மூலம் விண்ண ப்பங்களை வரவேற்றல் ஏப்ரல் 2020 - ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01 . 01 . 2020 அன்று 12 1 / 2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 27 . 01 . 2020 முதல் 31 . 01 . 2020 வரை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Nodal Centre ) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் .

மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தேர்வர் வசிக்கும் இருப்பிடத்திற்குட்பட்ட கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் மட்டுமே சென்று ( Nodal Centre ) விண்ண ப்பங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . விண்ணப்பிக்கச் செல்லும் போது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகலினை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் . தனித்தேர்வர்கள் Nodal centre - க்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் . Nodal centre - ல் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் ( Web Camera ) மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் , அம்மையங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் , அங்கேயே தேர்வுக்கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது . Online மூலம் விண்ண ப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் . தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive