Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாட்சப்பில் இதெல்லாம் இருக்கு-னு உங்களுக்கு தெரியுமா?

வாட்சப் இல்லாமல் ஒருவருடைய வாழ்க்கை இயங்காது என்ற அளவுக்கு அனைவரும் வாட்சப் பயன்படுத்துகிறோம். வியாபாரம் செய்வது முதல் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது, தேர்தலில் வெற்றி பெறுவது என அனைத்திற்கும் வாட்சப் பயன்படுகிறது.

 வாட்சப்பில் தெரியாத சில ட்ரிக்ஸ்கள் உள்ளன. அவை சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

தகவலுக்கு ரிப்ளை செய்ய ஹோல்ட் செய்து ரிப்ளை செய்ய வேண்டும் என்றில்லை. இடது பக்கமாக ஸ்வைப் செய்தால் ரிப்ளை செய்ய முடியும்.

 குரூப்களில் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் இணைக்க கூடாது என்றால் செட்டிங்கில் சென்று அக்கவுண்டை தேர்ந்தெடுத்து இருக்கும் ஆப்ஷனை செலக்ட் செய்யலாம்.

வாட்ஸப்பில் எண்‌ சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப முடியும் wa.me/91**********  என தொலைபேசி எண்ணை டைப் செய்து பின்னர் அந்த எண்ணுக்குரிய தகவலை அனுப்பலாம்.

பாண்டு(Font) ஸ்டைல்கள் மெசேஜ் அனுப்பும் போது மாற்ற இயலும். டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர் Font மாற்ற வேண்டிய டெக்ஸ்டை செலக்ட் செய்து ஹோல்ட் செய்தால் தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து தேவையான ஆப்ஷனை செலக்ட் செய்யலாம்.

 குரூப்பில் பிரைவேட்டாக மெசேஜுக்கு ரிப்ளை செய்ய மெசேஜ் ஐ கிளிக் ஆண்டு ஹொல்டு செய்து மேல் இருக்கும் 3 டாட்டை கிளிக் செய்தால் அதில் பிரைவேட் ஆப்சன் தேர்ந்தெடுத்து தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும்

வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும் அனுப்ப வேண்டுமென்றால் வீடியோவை செலக்ட் செய்து மேல் இருக்கும் 3டாட்டுகளை கிளிக் செய்து கலர் பாலட்டில் ஏதேனும் ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து வீடியோவில் கிளிக் அண்ட் ஹோல்ட் செய்தால் ஆடியோ மட்டும்‌அனுப்ப இயலும்.

உரையாடலை வேறொருவருக்கு அனுப்ப மூன்று டாட்களில கிளிக் செய்து எக்ஸ்போர்ட் என்ன அப்சனில் டேப்‌ செய்து ஷெயர் செய்யலாம் .

மெஸேஜ் பிறந்தநாளுக்கு 12 மணிக்கு அனுப்ப வேண்டும் என்றாலோ, வேறு மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டும் என்றாலோ நேரம் ஸ்கெடுள் செய்ய முடியும். SKEDit என்ற ஆப்பை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து அக்கவுண்ட் கிரியேட் செய்து பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோவும் அட்டாச் செய்ய முடியும்.

WhatsApp Business (வாட்ஸ்அப் பிஸ்னஸ்) என்ற வாட்சப்பின் மற்றொரு அதிகாரப்பூர்வ செயலி உள்ளது. அது பிஸினஸ் செய்பவர்களுக்கு பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 

நமது மொபைலில் உள்ள .png இமேஜ்களை ஸ்டிக்கர் ஆக மாற்ற முடியும். Personal stickers ஆப்பை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து தயாரிக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive