இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக்
கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம்
முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.இந்தப் பண்டிகையின் பெயர் பசந்த்
பஞ்சமி, அதாவது வசந்த காலத்தின் வருகையை அறிவித்தல் என்பதாகும்.
புதன்கிழமை முதல் வியாழக்கிழமை காலை வரை இது நீடிக்கும் என பஞ்சாங்கத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. பல வீடுகளில் வியாழக்கிழமை அன்று வழிபாடு
தொடங்கும்.
இதில் கலந்த கொண்ட
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "அனைத்து ஆசிரியர்களையும் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தும்" கொள்கை முடிவை அறிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு சரஸ்வதி பூஜை பரிசாக இது அமைந்தது.
சரஸ்வதி பூஜை காரணமாக மாநில அரசு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களாக இருப்பதால், மாநில அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...