பள்ளிக் கல்வித்துறையில் பணி புரிந்து, பணியின்போது இறந்த, 43 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது.
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், 18 நுாலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை இரண்டு பணியிடங்கள், காலியாக உள்ளன. இதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியே, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, தலைமைச் செயலகத்தில், ஐந்து பேருக்கு பணி நியமன ஆணையை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்.
அதேபோல், பள்ளிக் கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 43 பேரின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. பொது நுாலகத் துறையில் பணியின்போது இறந்த, ஒருவரின் வாரிசுக்கு, அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...