திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க
விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் கே.கருணாகரன் தலைமை தாங்கினார்.
திருச்சி அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் (பொறுப்பு)
சி.சிவக்குமார் கீழடி ஆய்வு குறித்து விளக்கிப் பேசினார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் தலைவர் பிரபாகர் ஜினாவானி செயலி மூலம் மாணவர்களுக்கு பிராமி எழுத்து வட்ட எழுத்து செயல்விளக்கமும், மலைக்கோட்டை வரலாற்று சின்னங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் விஜயகுமார், முகமது சுபேர், ரமேஷ், குணசேகர் உள்ளிட்டோர் சேகரிப்பில் உள்ள நாணயங்கள், பணத்தாள்களைகாட்சிப்படுத்தி அந்நாட்டின் வரலாறு கலாச்சாரம் பண்பாடு பொருளாதாரம் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் S.சிவக்குமார்
கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார் பள்ளி மாணவர்கள் கண்காட்சியினை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
முன்னதாக தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்க, லாரன்ஸ் அமலின் சவரி ராஜ் நன்றி கூறினார். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பிரபாகர் ரமேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...