வாரத்தில்
நான்கு நாட்கள் மட்டுமே பணி, அதுவும் தினசரி 6 மணி நேரம் மட்டுமே வேலை
செய்தால் போதும் என்ற புதிய அறிவிப்பை பின்லாந்து பிரதமர் சன்னா மரின்
தெரிவித்துள்ளார்.
என்ன..
நினைச்சு பார்க்கவே நல்லா இருக்கு இல்ல. இது பொய்யல்ல உண்மை தான்.
பின்லாந்தின் 36 வயதான பிரதமர் சன்னா மரின் எடுத்த அதிரடியான இந்த முடிவு
உலகெங்கிலும் உள்ள ஊழியர்கள் மத்தியில் கடுப்பை கிளப்பியுள்ளது என்று தான்
கூறவேண்டும்.
ஏனெனில் நம் நாட்டில் இப்படி ஒரு அறிவிப்பு இல்லையே என்ற ஏக்கம் தான்.
ஊழியர்கள் வரவேற்பு
பொதுவாக
இந்தியாவில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அதிலும் பண்டிகை தினம்,
டார்கெட், வருட முடிவு, மாத முடிவு என பெரும்பாலான விடுமுறைகள் பெயரளவில்
மட்டுமே இருக்கும். அப்படி இருக்கையில் சன்னாவின் இந்த அதிரடியான அறிவிப்பு
கடுப்பை கிளப்பத்தானே செய்யும். அதிலும் சில சமயங்களில் ஒரு மணி நேரம்
அலுவலகம் வந்து விட்டு உடனே சென்று விடுங்கள் என்றும் கூறும் உயர்
அதிகாரிகள், அலுவலகம் சென்றால் அதை மறப்பது சகஜம் தான்.
எதற்காக இப்படி ஒரு நடைமுறை?
ஊழியர்கள்
தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகத் தான்
இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சன்னா தெரிவித்துள்ளார். மேலும்
இந்த திட்டமானது ஏற்றுக் கொள்ளப்பட்டால் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன்
அதிக நேரம் செலவிட முடியும். நெகிழ்வான வேலை, சரியான நேரம் உள்ளிட்டவை
வாழ்வில் அடுத்தகட்டமாக இருக்கக் கூடும் என்று 34 வயதான சன்னா
தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலை
தற்போது
பின்லாந்தில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை. வாரத்தில் ஐந்து நாட்கள்
வேலை நேரம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டில் ஸ்வீடன்
முன்னோக்கிச் சென்று ஆறு மணி நேரம் வேலை நாளை ஏற்றுக் கொண்டது. இந்த
அமைப்பின் விளைவு, அதிக உற்பத்தி திறன் கொண்ட மகிழ்ச்சியான ஊழியர்களைக் அது
காட்டியது. ஆக சன்னாவின் இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா, வந்தால்
நன்றாகத் தான் இருக்கும்.
சக்சஸ் பார்முலா
ஏற்கனவே
ஜப்பானில் இருக்கும் இந்த நடைமுறையால், அதிக உற்பத்தி காணப்படுகிறது.
நீயூசிலாந்தில் உள்ள பிரபல நிறுவனமான கார்டியன் 2018ம் ஆண்டே வாரத்துக்கு
நான்கு நாட்கள் பணி என்ற நடைமுறையை பின்பற்றி வருகின்றது. இது குறித்து
அந்த நிறுவனத்தின் நிறுவனர், இந்த நடைமுறையால் எங்கள் நிறுவனத்தின்
உற்பத்தி அபரிதமாக அதிகரித்துள்ளது. இதனால் அதிக லாபம் கிடைத்திருக்கிறது
என்றும் கூறியிருப்பது கவனிக்கதக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...