Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.20

திருக்குறள்


திருக்குறள் : 367

அதிகாரம் : அவாஅறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

பொருள்:

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

பழமொழி

Little strokes fell great oaks.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

ஒருவரது வாழ்வியல் இன்பங்கள் அவரது சுய நடவெடிக்கைகள் மூலம் கிடைக்கிறது....

------விவேகானந்தர்.

பொது அறிவு

ஜனவரி 30- இன்று தியாகிகள் தினம்

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் . 

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

English words & meanings

Desmology – study of ligaments. தசை நார் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

 Dauntless - shows fearlessness. எதற்கும் அஞ்சாத.

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படாத காரணத்தினால் செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது.

Some important  abbreviations for students

CASE - Commission for Alternative Sources of Energy

CCS - Cabinet Committee on Security

நீதிக்கதை

குரங்கை நம்பிய தோட்டக்காரன்

குறள் :
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

விளக்கம் :
அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரணமாகத் தேர்ந்தெடுத்தது பதவியில் அமர்த்துவது, அரசனுக்கு அறியாமை பலவற்றையும் தரும்.

கதை :
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன்.

வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

நீதி :
அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.

வியாழன்
அறிவியல் & கணினி

மழை காடுகள்


 * இவை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பிரதேசங்களில் காணப்படும்.
* உலகின் தாவரங்கள் மற்றும் விலங்குகள் 50% இங்கு தான் காணப்படுகின்றன ஆனால் இவை பூமியில் 2% இடத்திலேயே காணப்படுகின்றன.
* அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே மழைக்காடுகள் காணப்படுவதில்லை.

இன்றைய செய்திகள்

30.01.20

* மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

* வெளிமாநிலத்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிம்கார்டு விற்கும், விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

* கொரோனா வைரஸ் பாதிப்பினால்  சீனாவுக்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில்நோவக் ஜோகோவிச், ரோஜர்பெடரரும், மகளிர் பிரிவில்ஆஷ்லே பார்டி, சோபியாகெனினும் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

*  நியூசிலாந்துக்கு எதிராக பரப்பரப்பாக நடைபெற்ற 3- வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம்  டி20 தொடரை வென்றது இந்தியா அணி.

Today's Headlines

🌸Central Ministry of Internal Affairs, Central Ministry of Youth Affairs, Ministry of Games and Nehru Yuvakendra Sankethan organises 12th Tribal Junior Exchange Programme to be commenced in Chennai on February 1st.

🌸Erode police department has warned that case will be filed against those who buy and sell sim cards  without proper records.

🌸Flights to China have been stopped due to the corona virus being spread.

🌸In Australian Open tennis, Novak djokovic and Roger Federer from the men's side and Ashleigh barty and Sofia kenin from the women's side progressed to semi-finals.

🌸Rohith Sharma has hit two sixes in super over of the third T-20 match against Newzealand and made India win the T-20 series.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive