Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரித்தாக்கலில் 2 புதிய மாற்றங்கள்

தனிநபர் அல்லது கூட்டாக சொத்து வைத்திருப்போர் வருமான வரித்தாக்கல் செய்யும் முறையில் 2 புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.


பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தனிநபர்கள் தங்களின் வருமான வரியை செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தும். அதன்படி 2020-21 ம் ஆண்டிற்கான தனிநபர் வருமான வரித்தாக்கலில் சொத்து குறித்த விபரத்தில் 2 மாற்றங்களுடன்,ஜன.,3 ம் தேதி வருமான வரித்தாக்கல் அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, வீட்டு சொத்தில் கூட்டு பங்கு இருக்கும் தனிநபர்கள் ஐடிஆர் -1 அல்லது ஐடிஆர்-4 படிவங்களை இணைக்க முடியாது. இதே போன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக வங்கி கணக்கில் இருப்பு வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு பயண செலவு அல்லது மின் கட்டணம் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக செலவிடுபவராக இருந்தால் அவர்களுக்கு ஐடிஆர் - 1 படிவம் பொருந்தாது. இந்த விதிகளின் கீழ் வருவோர் வேறு படிவங்களை பூர்த்தி செய்து, தாக்கல் செய்ய வேண்டும்.
ரூ.50 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்- 1 படிவம் பொருந்தாது எனவும், ரூ.50 லட்சம் வரை வருமானம் உடைய தொழிலதிபர்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு ஐடிஆர்-4 படிவம் மட்டுமே பொருந்தும் எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:
https://m.dinamalar.com/detail.php?id=2451617




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive