Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொகுதி - 2ல் சர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

திரு . பி . சந்திரசேகரன் என்பாரால் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொகுதி 2 பக்கம் . 50 - ல் “ அதே போன்று இந்து மகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம் சேவக் சங் ( RSS ) ஆகியன முஸ்லீம்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தன ” என்றும் இது போன்று ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளது என தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் W . P . No . 639 / 2020ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

இவ்வழக்கு  ( 10 . 01 . 2020 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்புக்கு வந்ததது என பணிவுடன் தெரிவிப்பதோடு , மேற்குறிப்பிட்ட வாசகம் சார்ந்த பாடக்குறிப்பு அடுத்ததாகப் பாடப்புத்தகம் அச்சிடும்போது இது நீக்கம் செய்யப்படும் என அரசு வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டது . இதனை ஏற்றுக்கொண்டும் தற்போது வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள இப்பகுதிக்கு மேலே தாளிட்டு மறைத்து ஒட்டப்பட வேண்டும் எனவும் , நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை உறுதி ஆவணமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக 22.01.2020 அன்று மாண்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது .

மேலே தெரிவிக்கப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில வழி பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொகுதி 2 சார்ந்த பகுதி குறிப்பிடப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . எனவே , பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொகுதி - 2 ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மேற்குறிப்பிட்ட வாசகம் சார்ந்த பாடக்குறிப்பியின் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகத்தில் உள்ள இப்பகுதிக்கு மேலே தாளிட்டு மறைத்து ஒட்டப்பட வேண்டும் எனவும் , முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்க கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .
 
 

 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive