*.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு, நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, வேலை வாய்ப்பு வெள்ளியாக அனுசரிக் கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை யில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
*.இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெறுகின்றனர்.
*.சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங் களும் இணைந்து வரும் 24-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.
*.சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 24-ம் தேதி காலை 10 முதல் பகல் 2 மணி வரை முகாம் நடக்கிறது.
*.இதில், 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதி யுடையஅனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
*.இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிபணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.
*.இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறைநிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறு வனத்துக்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
*.வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...