பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய
தனி தேர்வர்கள், 'தத்கல்' முறையில் பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.பிளஸ் 1
மற்றும் பிளஸ் 2வில், பழைய பாடத் திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதி,
சிலபாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், பழைய பாடத் திட்டத்திலேயே, வரும்
மார்ச் மற்றும் ஜூனில் தேர்வுகளை எழுதலாம்.
நேரடி தனி தேர்வராக, பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி, அதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொது தேர்வையும், அதனுடன், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வையும் எழுதலாம். இதற்கு, ஏற்கனவே, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அப்போது விண்ணப்பிக்க தவறியவர்கள், தத்கல் சிறப்பு கட்டண முறையில், ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; இன்று கடைசி நாள்.அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...