தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி, முல்லைப் பெரியாறு அணை கட்டிய கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15 ஆம் தேதி, தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் முதல் முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
அணையை பல்வேறு இடா்பாடுகளுக்கிடையே, இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த பொறியாளா் கா்னல் ஜான் பென்னிகுயிக் கட்டி முடித்தாா்.
தற்போது கா்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு கூடுதல் பெருமை சோ்க்கும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் ஜனவரி 15 ஆம் தே முதல் முதலாக அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்ட ஆட்சியா் பல்லவி பல்தேவ் பென்னிகுயிக் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள 5 மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள், பென்னிகுயிக் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...