Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.20

திருக்குறள்


திருக்குறள் : 369

அதிகாரம் : அவாஅறுத்தல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

பழமொழி

Your Actions will nail You

தன் வினை தன்னைச் சுடும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

மோசமான சூழல் ஏற்படின் சாதகமான சூழலுக்காக காத்திருப்பு அவசியமாகிறது.

------- சாக்ரடீஸ்

பொது அறிவு

1.தமிழ்நாட்டில் கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம் எந்த இடத்தில் அமைந்துள்ளது ?

 ராணிப்பேட்டை.

2. தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் எந்த ஊரில் அமைந்துள்ளது?

 ஸ்ரீவில்லிபுத்தூர்.

English words & meanings

Felinology – study of felines பூனை பேரினத்தை சார்ந்த விலங்குகள் குறித்த அறிவியல்.

Feeble minded - mentally weak. மன உறுதியற்ற

ஆரோக்ய வாழ்வு

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகத்தில் பொழிவு அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

diag. - diagram. 

disc. - discovered

நீதிக்கதை

திருக்குறள் கதை

 குறள் : தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.

குறள் விளக்கம் : ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். குறளுக்கான கதை :
👤🔫 அது ஒரு வனப்பகுதி. அங்கு பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அங்கு அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். அவன் மானின் அழகிய தோற்றத்தை கண்டு அதை வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது. அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள்? அவன் எங்கே இருந்தாலும் அவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் கோபமாக உருவெடுத்தது.
👤🔫 உடனே கடவுளை துதித்தான். கடவுளும் வந்தார்...! பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? என்று கடவுள் கேட்டார். அறிவாளி பக்தன் என்ன கேட்க வேண்டும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. கோபம் கண்ணை மறைத்தது. ஆனால் அவன் தெய்வமே! நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும் அவன் என் முன்னே வரவேண்டும். அவனை என் கோபம் தீர அடிக்க வேண்டும் இதுதான் பக்தன் கேட்ட வரம்.
 👤🔫 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார். பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே என்று கூறினார். அவனோ இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான். சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். என்று வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார். 👤🔫 பக்தன் திரும்பி பார்த்தான். அங்கே நின்றது சிங்கம். பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து என்று கத்தினான். கடவுள் சிரித்தார்... அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.
நீதி : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

இன்றைய செய்திகள்

01.02.20

* கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்து உள்ளது.

* சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

* ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற அதன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து  நேற்று பிரிட்டன் வெளியேறியது.

* இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

* நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

* ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கிளப்புகளில் ஒன்றான ஸ்காட்லாந்தின் ரேஞ்சா்ஸ் எஃப்சி அணியில் ஆட இந்திய வீராங்கனை நகன்கோம் பாலதேவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்

Today's Headlines

🌸The World Health Organization has declared a worldwide emergency on the spread of coronavirus.

🌸 Minister Vijayabaskar says that 242  Tamilians who returned  ​​from China are not affected by coronavirus

 🌸Britain's exit from the European Union has been approved by its parliament so Britain left the European Union yesterday.

 🌸Rani Rampal, captain of the Indian hockey women's team, has been selected for the World's best player of the Year award.

🌸 India won the Super Over in the 4th ODI against New Zealand.

 🌸 Indian player Nankom Baladevi has signed  to play for Scotland's Rangers , one of Europe's leading football clubs.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive