வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் தானாக மறைந்து போக
செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட
நேரத்திற்கு பின் குறுந்தகவல்களை தானாக அழித்துவிடும்.வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் இந்த அம்சம் வெவ்வேறு பெயர்களில் சோதனை
செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் முன்னதாக டிசப்பியரிங் மெசேஜஸ் என்ற
பெயரில் காணப்பட்டது. தற்சமயம் இது டெலீட் மெசேஜஸ் என்ற பெயரில் சோதனை
செய்யப்படுகிறது.
பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் அம்சத்தினை வாட்ஸ்அப் டெலீட்
ஃபார் எவ்ரிவொன் என்ற பெயரில் வழங்கியதைத் தொடர்ந்து இந்த அம்சத்தின் பெயர்
மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.புதிய டெலீட் மெசேஜஸ் அம்சம் பயனர் குறிப்பிட்ட நேரத்தை குறித்ததும்,
குறுந்தகவல் அந்த நேரத்தில் தானாக அழிந்துவிடும். இந்த அம்சம் முதற்கட்டமாக
வாட்ஸ்அப் க்ரூப்களில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. மேலும் இதனை க்ரூப்
அட்மின்கள் மட்டுமே இயங்க வைக்க முடியும்.
தற்சமயம் தனிநபர் உரையாடல்களில் இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த
முடியாது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களின் பழைய குறுந்தகவல்களை
அழிப்பதன் மூலம் போன் ஸ்டோரேஜ் அளவை சேமிக்க முடியும். புதிய அம்சம் சோதனை
செய்யப்படுவதால், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...