வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள்
பொது
1.1 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன . வாக்கு எண்ணும் கடமை மற்றும் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவதற்கு முன்னர் இது தொடர்பான நடைமுறைகள் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும் .
1 . 2 சாதாரணத் தேர்தல்களின்போது , கீழ்க்காணும் ஊராட்சிகளுக்கான தேர்தல்களில் வாக்குப்பதிவு ஒரே நேரத்தில் நடைபெறும் .
1 . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ;
2 . கிராம ஊராட்சி தலைவர் தேர்தல்கள் ;
3 . ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ; மற்றும்
4 . மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் .
1 . 3 ஒரு வாக்குச்சாவடியில் நடைபெறும் மேற்கண்ட அனைத்து தேர்தல்களுக்கும் தனித்தனி வாக்குச்சீட்டுக்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே வாக்குப்பெட்டியில் போடப்படும் . அந்த வாக்குச்சாவடி இரு வார்டு வாக்குச்சாவடியாக இருப்பினும் , இரண்டு வார்டுகளுக்கான வாக்குச்சீட்டுகளும் அதே வாக்குப்பெட்டியில் போடப்படும் . மொத்தத்தில் வாக்களிக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு வாச்சப்பெட்டியும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணுமிடத்திற்கு அனுப்பப்படும் . இந்நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்கு ஏதுவாக கீழ்க்கண்டவாறு வெவ்வேறு வண்ணத் தாள்களில் அவைகள் அச்சிடப் பெறுகின்றன .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...