அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் வருகையை உறுதிபடுத்தும் வகையிலும் , மாணவர்கள் பாதுகாப்பாகப்
பள்ளிக்கு வருகை புரிந்த தகவலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையிலும்
மாணவர்களின் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு
குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இத்திட்டத்தின்படி மாணவ / மாணவியர் வருகை புரியாத நாட்கள் பற்றிய விவரம் மட்டுமின்றி மாணவ / மாணவியரின் அரசுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் , பருவத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் , தேசிய திறனாய்வுத் தேர்வு , ஊரகத் திறனாய்வுத் தேர்வு பற்றிய அறிவிப்பு மற்றும் முடிவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத் திட்டங்கள் , 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியர் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வழங்கப்படும் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பித்தல் , சுதந்திர தினம் , குடியரசு தினம் , குழந்தைகள் தினம் , பள்ளி ஆண்டு விழா போன்ற விழாக்களுக்குப் பெற்றோரை அழைத்தல் , உள்ளூர் விடுமுறை பற்றிய தகவல் , கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கும் நாள் / கடைசி வேலை நாள் , பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெறுதல் பற்றிய விவரங்கள் பெற்றேராரது கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது . எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் விவரங்கள் , பெற்றோரது விவரங்கள் மற்றும் பெற்றோரின் கைப்பேசி எண் ( Mobile No . ) ஆகிய விவரங்களை ஏற்கனவே EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதை மீள சரிபார்த்து உறுதி செய்யுமாறும் , மேற்படி விவரங்களை இதுநாள் வரை தலைமையாசிரியர்கள் பதிவு செய்யாமல் இருப்பின் , உடன் அவ்விவரங்களை பதிவு செய்யுமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக வரம்பிற்குள் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
- பள்ளிக்கல்வி இயக்குநர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...