2019 - 20ம் கல்வியாண்டின் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவ , மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் அந்தந்த
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள பாடநூல் விநியோக
மையங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின்
வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது .
பாடநுால் விநியோக மையங்கலிருந்து பள்ளி திறப்பதற்கு முன்பே பாடநூல்கள் எடுத்துச் செல்லப்பட்டு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கி ஒப்புதல் பெற வேண்டும் . மேலும் இரண்டாம் பருவத்தேர்வு / அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்கள் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படவேண்டும் .
பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து மாணாக்கர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்ட விவரத்தினை வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று தொகுத்து அறிக்கையாக ஜனவரி முதல் வாரத்தில் இவ்வியக்கத்திற்கு அனுப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் இப்பொருள் சார்ந்து எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...