போலி சான்றிதழ் வழங்கி விளையாட்டு இட
ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த ராமநாதபுரம் போலீஸ்காரர் உட்பட 3 பேரை
தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமாருக்கு புகார் அலைபேசி எண்ணில் பேசிய நபர், விளையாட்டு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் பெற்று பலர் போலீசாக பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து எஸ்.ஐ.,க்கள் குகனேஷ்வரன், முருகநாதன் தலைமையில் இரு தனிப்படையினர் விசாரித்தனர். கமுதி அருகே ஒ.கரிசல்குளத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி 35, யிடம் நடத்திய விசாரணையில் சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் 57, சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தார்.
சீமானிடம் அவர் மூலம் புதிய சான்றிதழ் கேட்டபோது , ஒரு சான்றிதழுக்கு 50 ஆயிரம் ரூபாய் கேட்டார்.
ராஜிவ்காந்தி மூலம் சீமான் வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
இதையடுத்து சீமான் அமெச்சூர் கபாடி அசோசியேஷன் பெயரில் கேரளா காசர்கோடு, மஞ்சேஸ்வரம் பகுதியில் தேசிய அளவிலான கபடி போட்டி நடந்ததாகவும், அதில் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடியதாக போலியாக சான்றிதழ் வழங்கினார்.
இதையடுத்து போலீசார் ராஜிவ் காந்தி, சீமான் ஆகியோரை கைது செய்தனர். சீமானிடம் விசாரித்ததில், தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாடும் வீரர்கள் 7 பேர், அவர்களுக்கு சப்ஸ்டியூட்டாக செல்லும் 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்குகிறோம்.
இதில் சப்ஸடியூட்களுக்கான சான்றிதழ்களை இது போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
இதில் கமுதி அருகே ஒ.கரிசல்குளத்தை சேர்ந்த மணிராஜ் 23, கடந்தாண்டு போலீஸ் தேர்வில் பங்கேற்று போலி சான்றிதழ் மூலம் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தார்.
அவர் தற்போது திருச்சி ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலி சான்றிதழ் மூலம் அரசுப்பணியில் சேர்ந்த ஒருவரையும், கடந்த மாதம் நடந்த போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற 5 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
வருண்குமார் எஸ்.பி., கூறியதாவது:
கபடி விளையாட்டு மட்டுமா அல்லது அனைத்து விளையாட்டு சான்றிதழ்களிலும் இது போல் போலிகள் உள்ளதா என்பது தெரியவில்லை.
அரசுப்பணிகளில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.
மேலும் 6 பேரை தேடி வருகிறோம், என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...