ஐடி துறையின் வளர்ச்சியினாலேயே இத்தைகைய அதிக சம்பளம் பெங்களூருவில் கொடுக்கப்படுகிறதாம். நாட்டிலேயே அதிக சம்பளம் வழங்கும் துறையாக ஐடி துறை உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ராண்ட்சடட் இன்சைட்ஸ் ஊதிய ட்ரெண்ட்ஸ் ரிப்போர்ட் அறிக்கையின் அடிப்படையில் பெங்களூருவில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.27 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம்.
இதேபோல், நடுத்தர ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு 16.45 லட்சம் ரூபாய் ஆகவும் சீனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் 35.45 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம். இந்த ஊதிய பட்டியல் அறிக்கையின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் 5 லட்சம் ரூபாய் ஆகவும் மும்பை நகரின் அதே ஊழியருக்கு 4.59 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற டிஜிட்டல் திறன்கள் கொண்டோருக்கான பணி வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இத்திறன்கள் கொண்டோருக்கே அதிக சம்பளமும் ஐடி துறையில் வழங்கப்படுகிறதாம். ஐடி துறைக்கு அடுத்து ஜிஎஸ்டி வல்லுநர்கள், கணக்காளர்கள், கன்சல்டன்ட் சேவை தருவோர், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கான ஊதியம் அதிகம் உள்ளதாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...