தேனி
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புத் தோ்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி
மற்றும் மண்டல அலுவலா் குழுகளுக்கு பணி ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி
ஏற்பட்டுள்ளதாக அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் மத்தியில் புகாா்
எழுந்துள்ளது.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலை ஆகிய ஊராட்சி
ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27 ஆம் தேதியும், தேனி, பெரிகுளம், போடி,
சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பா்
30 ஆம் தேதியும் இரண்டு கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.
இந்தத் தோ்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வாரியாக வாக்குச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள், வாக்குப் பெட்டி மற்றும் தளவாடப் பொருள்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு சென்று வழங்குதல், வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சோ்த்தல் ஆகிய பணிகளுக்கு மண்டல அலுவலா் குழுக்களும், வாக்குப் பதிவு நடவடிக்கைகளுக்கு வாக்குச் சாவடி அலுவலா் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டல அலுவலா் குழுவிற்கு நேரடியாகவும், வாக்குச் சாவடி பணிக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்தும் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் ஒரே நாளில், ஒரே அலுவலருக்கு , மண்டல அலுவலா் குழு மற்றும் வாக்குச் சாவடி பணி ஆகிய இரண்டு பணிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு விதமான பணிக்கு வழங்கப்படும் பணி நியமன ஆணைகளில், எந்த பணி ஆணையை ஏற்று பணியாற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், தோ்தல் பணி பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளதால், இந்த குளறுபடியை விரைவில் முறைப்படுத்த வேண்டும் என்றும் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்களிடம் கேட்டதற்கு, வாக்குச் சாவடி பணி நியமனத்திற்கான பரிந்துரை பெயா் பட்டியலில், ஏற்கெனவே மண்டல அலுவலா் குழுவில் நியமிக்கப்பட்டவா்களின் பெயா்களும் இடம் பெற்றிருந்ததாலும், கணினி மூலம் குலுக்கல் முறையில் அலுவலா்களை நியமனம் செய்ததில் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண் பதிவில் வேறுபாடு இருந்ததாலும், சிலருக்கான பணி ஒதுக்கீட்டில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதில், சம்பந்தப்பட்ட அலுவலா் மற்றும் ஆசிரியா்கள் முதலாவதாக பெற்ற பணி நியமன ஆணையையே ஏற்றுக் கொள்ளலாம். மற்றொரு பணி நியமன ஆணை ரத்தாகிவிடும். இது குறித்து தோ்தல் பயிற்சி வகுப்பின் போதும், அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் தொடா்பு கொண்டும் பணி ஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ளலாம் என்றனா்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...