தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு நாசா செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில்., இந்த வாய்ப்பினை உபயோகம் செய்து கொள்ள பணமின்றி தவித்து வருகிறார்.
சிறுமியான ஜெயலட்சுமி குடும்பத்தின் வரவு செலவுகளை கவனித்து வரும் நிலையில்., இவருடைய தந்தை அனுப்பும் பணம் மற்றும் அக்கம் பக்கத்தினர் செய்யும் உதவி மட்டுமே ஜெயலட்சுமி இல்லத்தின் முக்கிய வருமானமாக இருந்து வருகிறது.
மேலும்., தற்போது 11 ஆம் வகுப்பு பயின்று வரும் ஜெயலட்சுமி படிப்பில் சுட்டியாக இருந்து வரும் நிலையில்., இப்பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் மற்றும் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.
இதுமட்டுமல்லாது தாயார் செய்து வந்த முந்திரி வியாபாரத்தையும் கவனித்து வரும் நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோபர்க்குரு என்ற இணையம் மூலமாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு திருச்சியை சார்ந்த தான்யா என்ற மாணவி வெற்றிபெற்று நாசா செல்லும் வாய்ப்பை பெற்றது குறித்த செய்தியை நாளிதழ் மூலமாக படித்துள்ளார்.
இதனையடுத்து நாசாவிற்கு செல்ல விருப்பப்பட்டு இப்போட்டிக்கு விண்ணப்பித்து., தமிழ் மொழியில் படித்து வந்தாலும் ஆங்கிலத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்போட்டியின் முடிவுகள் வெளியான நிலையில்., ஜெயலட்சுமி இப்போட்டியில் தேர்வாகி நாசாவிற்கு செல்ல தேர்வாகியுள்ளார்.
நாசாவிற்கு செல்ல ஆகும் செலவை இணைய நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நிலையில்., நாசாவிற்கு செல்லும் மாணவர்களின் கைகளில் இருந்து ரூ.1.7 இலட்சம் செலவும் ஆகும் என்ற நிலையும் உள்ளது. படிப்பிற்கே பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டு ஜெயலட்சுமி பயின்று வரும் நிலையில்., இவ்வுளவு தொகையை செலவு செய்ய இயலாது என்று அமைதிகாத்துள்ளார்.
இவரை பற்றி நன்கு அறிந்த அக்கம் பக்கத்தினர் தங்களால் இயன்ற அளவு உதவி செய்துள்ள நிலையில்., பாஸ்போர்ட் போன்றவை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும்., இது குறித்த விபரத்தை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனுவும் கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி தெரிவித்த சமயத்தில்., எனது தாயும் - தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோபர்க்குரு போட்டியின் மூலமாக எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில்., பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி., எதற்காக பாஸ்போர்ட் வாங்குகிறீர்கள் என்று வினவினார்.
நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு குறித்தும்., எனது குடும்ப சூழ்நிலை குறித்தும் தெரிவித்து., நான் கட்டாயம் செல்வேனா என்பதும் எனக்கு தெரியாது, முயற்சியாக செய்கிறேன் என்று தெரிவித்தேன். இதனை அறிந்த அதிகாரி ரூ.500 கொடுத்து உதவி செய்தார். அப்துல்கலாம் போன்று பெரிய விஞ்ஞானியாக கட்டாயம் நான் வருவேன். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நான் தேர்வாகியிருப்பது ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறன் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...