யுஜிசியின் 543-வது ஆய்வுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் பிஎச்டி மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரை கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முறைகேடுகளைத் தடுக்கவும் ‘ஆராய்ச்சி கள் மற்றும் வெளியீடுகளுக்கான நெறிமுறை கள்’ என்ற பாடத்தை கட்டாயமாக்க முடிவெடுக் கப்பட்டுள்ளது.
இனி பிஎச்டி மாணவர்கள் தங்கள் 6 மாதகால முன்தயாரிப்பு பயிற்சியின் போது ‘ஆராய்ச்சிகள் மற்றும் வெளியீடுகளுக் கான நெறிமுறைகள்’ பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அடுத்தக்கட்ட ஆய் வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பல் கலைக்கழகங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
எம்.ஃபில் போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இந்தப் பாடத்தை படிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை யுஜிசி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...