மென்பொருள் மேம்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதால் அங்கன் வாடி மையங்களில் ஆதார் எடுக் கும் பணி மீண்டும் தொடங்கி யுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் 5 வயது வரையுள்ள குழந்தை களுக்கு ஆதார் எடுக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. 1,700 அங்கன் வாடி பணியாளர்கள், கையடக்க கணினியின் மூலம் குழந்தை களுக்கு ஆதார் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், குழந்தை களுக்கு ஆதார் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கையடக்க கணினியின் மென்பொருள் பதிப்பை மேம்படுத்தும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டது.இதனால் அங்கன்வாடி மையங் களில் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி கடந்த 3 மாதங் களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மென் பொருள் மேம்படுத்தும் பணி நிறை வடைந்ததை தொடர்ந்து ஆதார் எடுக்கும் பணி மீண்டும்தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கன்வாடி மையங்களில் ஆதார் எடுக்க பயன்படுத்தப்படும் கையடக்க கணினியின் மென் பொருளை மேம்படுத்தும் பணி நிறைவடைந்தது. மேம்படுத்தப் பட்ட மென்பொருளை பயன்படுத் துவது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கன் வாடி மையங்களில் மீண்டும் ஆதார்எடுக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் 5 வயது வரையுள்ள தங்களுடைய குழந்தையை அழைத்து வந்து அங்கன்வாடி மையங்களில் ஆதார் எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...